Saturday, July 31, 2010

எந்திரன் டிரைலர் ....

http://www.youtube.com/watch?v=gwTu8A94e5o

http://www.youtube.com/watch?v=44dcXY5zXWw

http://www.youtube.com/watch?v=2TUR9eZsZao

http://www.youtube.com/watch?v=9xqquNSdEfk

Sunday, July 25, 2010

எந்திரன் - முதல் promo...

ஒருவழியாக எந்திரன் பற்றிய அதிகாரபூர்வமான விளம்பரம் வெளிவர தொடங்கிவிட்டது ... அதன் முதல் கட்டமாக think music சார்பாக ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது ... இதோ அது உங்கள் பார்வைக்கு....

Friday, July 23, 2010

எந்திரன் பாடல் வெளியீடு ...

எந்திரன் பாடல் வெளியீடு வரும் 31ஆம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது என்பது அனைவருக்கும் அறிந்த விஷயமே அது குறித்து அதிகாரபூர்வமான விளம்பரம் மலேசியாவில் வெளியிடப்பட்டுள்ளது .... இதோ அந்த புதிய புகைப்படத்துடன் கூடிய விளம்பரம் உங்கள் பார்வைக்கு....














Monday, July 5, 2010

களவானி - திரைப்பட விமர்சனம் ...

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கிராமத்துக் கதை ஆனால் இதில் மதுரை கிடையாது ,அரிவாள் இருந்தும் ரத்த வாடை கிடையாது , இரண்டு கிராமங்கள் இடையே சண்டை இருந்தும் அரிவாள் சண்டை கிடையாது ,அழுக்கான முகங்கள் கிடையாது , இவை அனைத்துமே படத்தின் plus பாயிண்ட் என்றே சொல்லலாம் ...

ஒரத்தநாடு பக்கம் tutorial காலேஜில் +2 படித்துக்கொண்டு ஊரை சுற்றி களவானி தனம் செய்யும் வாலிபனாக வரும் விமல் நன்றாக நடிப்பில் மெருகேறி உள்ளார் ,+1 படிக்கும் மாணவியாக வரும் ஓவியா அழகாக உள்ளார் ,மற்ற படங்களை போல் உப்புக்கு சப்பாக இல்லாமல் இதில் கதாநாயகி கதாபாத்திரத்துக்கு நடிக்கவும்
நல்ல வாய்ப்பு உள்ளது அதை ஓவியா சரியாக பயன் படுதிக்கொன்டுள்ளார் , விமலின் பெற்றோராக வரும் சரண்யா , இளவரசுவும் கதாபாத்திரமாகவே வாழ்துள்ளனர் ,
படத்தின் முக்கிய தூண்கள் என்று கூற வேண்டும் எனில் அது கஞ்சா கருப்பு மற்றும் புது முகமாக வந்துள்ள வில்லன் திருமுருகன் ஆகியோர்தான் .

முதல் பாதியில் கூறப்படும் " அறிக்கி LC112 கூட்டு " என்பதை கொஞ்சம் குறைத்திருக்கலாம் இருந்தும் பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பை வைத்து செய்யும் அனைத்து கலாட்டாக்களும் வயிற்றை பதம் பார்க்கிறது .சில இடங்களில் பருத்திவீரன் போன்ற காட்சிகள் வருவதை திரைக்கதையில் தவித்திருக்கலாம் .. மேலும் படம் நெடுக இது
காமெடி படமா ஆக்க்ஷன் படமா என்ற குழப்பம் தெரிகிறது .

பல நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் அழகாக ஒரு கிராமத்தை காட்டி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் பச்சை பசேல் என்று தஞ்சை சுற்றுவட்டாரத்தின்
அழகை படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் ,
இசை : இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் .

திரைக்கதையில் இன்னும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் இது ஒரு காவியமாக அமைந்திருக்கலாம் . இருப்பினும் மனதை களவாடுகிறான் இந்த களவானி என்று தான் சொல்லவேண்டும் .

ஒரு வரி : குழுவினருக்கு "நீங்க வேணும்னா பாருங்க இவன் டாப் ல போக தான் போறான் "...

இப்படிக்கு ,
கெளதம் ...