


















இங்கு நாம் சினிமா மற்றும் பல அன்றாட நிகழ்வுகள் குறித்த அலசல்கள் , விமர்சனங்கள் மற்றும் புதிய செய்திகளை காண்போம் ......
எந்திரன் சவுண்ட் எடிட்டர் ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டி Times of India நாளிதழுக்கு இன்று அளித்துள்ள பேட்டியின் தமிழாக்கம் இதோ உங்கள் பார்வைக்கு...ஆஸ்கார் விருதை வென்ற பின்பு அநேகமாக ரசூல் பணிபுரியும் படம் இதுவாகத் தான் இருக்கும். “கதை எதிர்காலத்தில் நடப்பது போல இருந்தாலும், யதார்த்தமாகவும் நம்பும்படியாகவும் இருக்கும். சென்னை புறநகரில் துவங்கும் எந்திரன் கதை படம் பிறகு கற்பனைக்கு எட்டாத இடத்திற்கு பயணிக்கும். லாஜிக் குறைப்பாடுகள் படத்தில் அறவே இல்லை எனலாம். சவுண்ட் எஃபக்ட்டுகளை பொறுத்தவரை EXPLORE செய்ய வேண்டியது இன்னும் நிறைய உள்ளது.
இசைப்புயல் ரஹ்மான் இதையெல்லாம் தான் இசையில் எப்படி கொண்டுவருகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.
எந்திரனைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகப் பெரிய படங்களுள் ஒன்று என்று கூறலாம். எந்திரனின் கதையும் களமும் தான் புதிதே தவிர, படம் அக்மார்க் தமிழ் படம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரஜினி சும்மா பிய்த்து உதறியிருக்கிறார். பேட்மேன் படத்தில், ‘ஜோக்கர்’ என்னும் குரூர வில்லன் பாத்திரத்தில் ஜாக் நிக்கல்சனை பார்ப்பது போல இருக்கும் எந்திரனில் ரஜினியை பார்ப்பது."

தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:
“சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘எந்திரன்’. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தி நடிகர் டேனி டெங்சொங்பா ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
பெரு நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘எந்திரன்’ படத்தின் பாடல்கள் ஜூலை மாதம் வெளியாகிறது…”
தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் அங்கே ஒரு செயற்கை தாஜ்மகால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்க்க ஆவலுடன் நிறையப் பேர் வருகிறார்கள்.
அதைப் பார்க்க விரும்பியவர்களுள் ரஜினியும் ஒருவர். ஆனால், தாஜ்மகாலைப் பார்க்கப் போகும் தன்னைப் பார்க்க பெரும் கூட்டம் கூடி, சூழ்நிலை கெட்டுவிடுமே என்பதால், சமீபத்தில் அங்குபோனபோதுகூட அய்யன் அருவியை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பினார்.
இந்த நிலையில், சமீபத்தில் கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த தாஜ்மகாலில் ஒரு காதல் கவியரங்கம் நடந்தது. தமிழக அரசின் சுற்றுலாத்துறைதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
தாஜ்மகால் மீது அழகான மேடை… அதில் முகலாயர் கால ஸ்டைலில் வெள்ளைத் திண்டுகள். மேடையில் கவிஞர் வைரமுத்து அமர்ந்திருக்க, காதல் கவியரங்கம் தொடங்கியது.
நல்ல கூட்டம். தாஜ்மகால் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் இளைஞர்கள்.
அதில் ஒரே ஒரு முதியவர் மட்டும் வித்தியாசமாக தெரிந்தார். தள்ளாத வயது, நரைத்த தலை, கூரிய பார்வை. கவியரங்கத்தின் மீதே கண்ணும் காதும் வைத்து லயித்து இருந்தார்.
வைரமுத்துவின் கவிதை வரிகள் மழையாய் விழுந்தன. வரிக்கு வரி கூட்டம் கைத்தட்ட, அந்த வயதான முதியவர் மட்டும் அடிக்கடி தலையாட்டினார். தாடியை தடவியடி சிரித்துக்கொண்டார்.
“இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி” என்ற வரியையும், “கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது” என்ற வரியையும் ஆரவாரத்தோடு சபை ரசித்தபோது, அவரும் ரசித்தார்.
“யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது…
யமுனை வற்றிவிடும்…கூவம் வற்றாது”
-என்று வைரமுத்து கவிதை சொன்னபோது எழுந்த சிரிப்பின் அலைகளில், முதியவரும் மிதந்தார்.
கவியரங்கம் முடிந்தது. தடியை ஊன்றிக்கொண்டே முதியவர் கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விட்டார்.
அந்த முதியவர் வேறு யாருமல்ல. ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்!!
நேரடியாக வந்தால் பரபரப்பு ஏற்படும் என்பதால், ரஜினிகாந்த் மாறுவேடத்தில் மின்னலாய் வந்து ரசித்துவிட்டுப் போனார்.
யாரும் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவரை அறிந்துகொண்டவர் ஒரே ஒரு அதிகாரி.. அவரும் காட்டிக் கொடுக்கவில்லை.
அடுத்தமுறை ஏதேனும் விசேஷ கூட்டங்களில், நிகழ்வுகளில் உங்கள் பக்கம் நிற்பவரை எதற்கும் உற்றுக் கவனியுங்கள்… உங்கள் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறவும் வாய்ப்புள்ளது!!
உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சூப்பர் ஸ்டாரின் – தி ரோபோ வரும் ஆகஸ்ட் இறுதி வாரம் வெளியாகும் என முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன.
இதைத்தான் ரஜினியும் சில தினங்களுக்கு முன், தீவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள கோடைத் திருவிழாவுக்கு வந்திருந்தபோது நிருபர்களிடம் தெரிவித்தார். படம் தனக்கு திருப்தியாக வந்துள்ளதாகவும், ஆகஸ்ட் இறுதியில் படம் வெளியாகும் என்றும் கூறியது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, படத்தின் விளம்பர முன்னோட்டங்கள் தயாரிக்கும் பணியில் எந்திரன் குழு மற்றும் சன் பிக்ஸர்ஸ் மும்முரமாக உள்ளது.
‘Some are born… Some are made… Superstar Rajinikanth’s Enthiran is arriving fast’ என்ற வாசகங்கள் அடங்கிய முதல் ட்ரெயிலர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பக்கம், பிரசாத் ஸ்டுடியோவில் எந்திரனின் குறிப்பிட்ட காட்சிகளுக்கு மட்டும் ஒலிக்கோர்ப்பு மற்றும் ஒலி வடிவமைப்புப் பணியை முடித்துக் கொடுத்துள்ளார் ரசூல் பூக்குட்டி. முழுப் பணிகளையும் முடித்துத் தர தனக்கு கிட்டத்தட்ட 2 மாதங்கள் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரஹ்மான் பின்னணி இசை சேர்க்கும்போதே ரஸுலும் தனது பணிகளை முடிக்கக் கூடும் என்பதால் ஜூலைக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும் என்கிறார்கள்.
இதற்கிடையே, எச்பிஓ சேனலுடன் இணைந்து உலகமெங்கும் படத்தை விநியோகிக்கும் வர்த்தகப் பணியில் மும்முரமாக உள்ளது சன் பிக்சர்ஸ். வரவிருக்கும் நாட்களில் படத்தின் வர்த்தகம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பிரதானமாக நிற்கக் கூடும்.
சவுண்ட் டிசைனிங் எனப்படும் ஒலி வடிவமைப்பு இன்றைக்கு படங்களில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் ரொம்ப வருடங்களுக்கு முன்பே இந்த தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது. இப்போது பாலிவுட்டிலும் சவுண்ட் டிஸைனிங் இல்லாத படங்கள் இல்லை என்ற நிலை. ஆனால் கோலிவுட்டில், சவுண்ட் டிசைனிங் பற்றிய உணர்வு பெரும்பாலானோருக்கு இல்லை. தமிழில் பக்கா சவுண்ட் டிசைனிங்குடன் வெளியான முதல் படம் அச்சமுண்டு அச்சமுண்டு. செய்தவர் குணால் ராஜன். இவர் வசிப்பது இங்கல்ல… அமெரிக்காவில்!
ஜஸ்ட் 25 வயதில் ஹாலிவுட்டின் முன்னணி சவுண்ட் டிசைனராகக் கலக்குகிறார் (செல்லுமிடமெல்லாம் சிறப்பு சேர்ப்பது தமிழனின் பலமாச்சே…).
புதுச்சேரியைச் சேர்ந்தவர் குணால் ராஜன். அமெரிக்காவில் 20 வயதில் செட்டிலானவர், அடுத்த சில ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்கள், பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் இணையதள படத் தொடர்கள் (அமெரிக்காவில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் இந்த வெப் சீரிஸ்தான்!) என பெரிய சாதனையைச் செய்துள்ளார்.
ஜான் எம் சூ இயக்கிய ஸ்டெப் அப் 1-2-3 எனும் புகழ்பெற்ற பட சீரிஸுக்கு குணால்தான் சவுண்ட் டிசைனர். அடுத்து இதே இயக்குநரின் எல்டிஎக்ஸ் படத்திலும் குணால் பணிபுரிகிறார். சமீபத்தில்தான் வெப்சீரிஸ் ஒன்றுக்கு சவுண்ட் டிசைன் செய்ததற்காக ஹாலிவுட்டில் புகழ் மிக்க ஸ்டீரிமி அவார்டு வாங்கியிருக்கிறார் குணால்.
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பணியாற்றியுள்ளார் குணால். இந்தப் படம்தான் சவுண்ட் டிசைனிங் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம். ஸ்லம்டாக் மில்லியனேர், ப்ளூ படங்களில் ரசூல் பூக்குட்டியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவருக்கு லேட்டஸ்டாகக் கிடைத்துள்ள அஸைன்மெண்ட், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஷங்கரின் ‘எந்திரன்’ சவுண்ட் டிஸைனிங்!
விஷயம் கசிந்ததும், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குணால் ராஜனுடன், இயக்குநர் லேகா ரத்னகுமார் அலுவலகத்திலிருந்து, தொலைபேசியில் பேசினோம்.
அவர் கூறுகையில், “தியேட்டர்ல படம் பாக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போதெல்லாம், தியேட்டரில் ஒலியலைகள் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் பிரிந்து செல்லும் ஜாலத்தை பிரமிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
எனக்கு அந்த டெக்னிக்கை முழுசாக தெரிந்து கொள்ள ஆசை வந்தது. ப்ளஸ்டூ முடித்ததும் ஆடியோ சவுண்ட் பற்றிய கோர்ஸை தேர்ந்தெடுத்தேன். சிங்கப்பூரில்தான் படித்தேன். அமெரிக்காவில் சவுண்ட் டிசைனிங் கோர்ஸ் முடித்தேன். இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். சொந்தமாக ஸ்டுடியோவும் இருக்கிறது. பல ஸ்டுடியோக்களுக்காகவும் பணியாற்றுகிறேன்..” என்றவரிடம், எந்திரன் வாய்ப்பு குறித்து கேட்டோம்.
“எந்திரனுக்கு ரஸூல் பூக்குட்டிதான் சவுண்ட் டிசைன் பண்ணுகிறார். அவரது மும்பை ஸ்டுடியோவில் 40 சதவிகித பணிகளும், இங்கே என்னுடைய ஸ்டுடியோவில் வைத்து 40 சதவிகித பணிகளும் நடக்கின்றன. எந்திரன் ஒரு பிரமாண்ட பொழுதுபோக்குப் படம். அதற்கு சவுண்ட் டிசைனிங் மிக முக்கியம். நிச்சயம் மைல்கல்லாக இருக்கும். படத்தின் மிக சிக்கலான சில காட்சிகளை இங்கு வைத்துதான் சவுண்ட் டிசைன் செய்கிறோம்” என்றார்.
எந்திரன் படக் காட்சிகளைப் பார்த்துவிட்டீர்களா என்றால், ஒரு கணம் அமைதி காத்தவர், “சில காட்சிகளைப் பார்த்தேன். ஆனால் எதையும் நான் வெளியில் சொல்ல முடியாது. ஒரு ட்ரெயின் ஃபைட், மிரட்டலான க்ளைமாக்ஸ் போன்றவற்றைப் பார்த்தபிறகுதான் அந்தப் படத்தின் ரேஞ்ச் தெரிந்தது. தமிழில் இதுபோல ஒரு படம் பார்த்ததில்லை. இது முதல்தரமான ஒரு ஹாலிவுட் படம் என்ற உணர்வுடன்தான் பணியாற்றப் போகிறேன்…”, என்கிறார்.
என்னதான் சிறப்பாக சவுண்ட் டிசைன் செய்தாலும், அதை துல்லியமாக ஒலிக்கத் தேவையான வசதிகளைக் கொண்டதாக திரையரங்குகள் இருக்க வேண்டுமல்லவா…?
இந்தக் கேள்வியை முன் வைத்ததும், “மிகவும் கவலைக்குரிய உண்மை அது,” என்றவர், “இன்றைய சூழலில் 10 சதவிகித திரையரங்குகள் கூட துல்லியமான சவுண்ட் சிஸ்டத்துடன் இல்லாததால், படத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது. இதனை சரி செய்ய வேண்டும். அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கு 7 பாயிண்டுகளில் ஒலிப்பதிவு செய்தோம். ஆனால் இங்குள்ள தியேட்டர்களில் 4 பாயிண்டுகள் கூட கேட்கவில்லை…” என்றார்.
சுவாரஸ்யமான விஷயம்: குணால் ஒரு தீவிர ரஜினி ரசிகர்!
“அதெப்படிங்க இல்லாம இருக்க முடியும்… தமிழ்நாட்டு இளைஞன் ஒருத்தன் ரஜினிக்கு ரசிகனா இல்லாம இருந்தாத்தான் அது நியூஸ். எத்தனை பெரிய லெவல்ல இருந்தாலும், ரஜினி படம்னா, ரசிகர்களுள் ஒருத்தனா மாறிடுவேன். அவர் படத்தை செமஜாலியா பார்த்து ரசிச்ச நான், இப்போ அவர் படத்துக்கே சவுண்ட் டிசைன் பண்றேன். சந்தோஷமா இருக்கு…” என்றார் ஒரு ரசிகனுக்கே உரிய குதூகலத்துடன்…!
நன்றி: என்வழி.காம்