Saturday, June 5, 2010

Some are born… Some are made…

உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சூப்பர் ஸ்டாரின் – தி ரோபோ வரும் ஆகஸ்ட் இறுதி வாரம் வெளியாகும் என முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இதைத்தான் ரஜினியும் சில தினங்களுக்கு முன், தீவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள கோடைத் திருவிழாவுக்கு வந்திருந்தபோது நிருபர்களிடம் தெரிவித்தார். படம் தனக்கு திருப்தியாக வந்துள்ளதாகவும், ஆகஸ்ட் இறுதியில் படம் வெளியாகும் என்றும் கூறியது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே, படத்தின் விளம்பர முன்னோட்டங்கள் தயாரிக்கும் பணியில் எந்திரன் குழு மற்றும் சன் பிக்ஸர்ஸ் மும்முரமாக உள்ளது.

‘Some are born… Some are made… Superstar Rajinikanth’s Enthiran is arriving fast’ என்ற வாசகங்கள் அடங்கிய முதல் ட்ரெயிலர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னொரு பக்கம், பிரசாத் ஸ்டுடியோவில் எந்திரனின் குறிப்பிட்ட காட்சிகளுக்கு மட்டும் ஒலிக்கோர்ப்பு மற்றும் ஒலி வடிவமைப்புப் பணியை முடித்துக் கொடுத்துள்ளார் ரசூல் பூக்குட்டி. முழுப் பணிகளையும் முடித்துத் தர தனக்கு கிட்டத்தட்ட 2 மாதங்கள் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரஹ்மான் பின்னணி இசை சேர்க்கும்போதே ரஸுலும் தனது பணிகளை முடிக்கக் கூடும் என்பதால் ஜூலைக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும் என்கிறார்கள்.

இதற்கிடையே, எச்பிஓ சேனலுடன் இணைந்து உலகமெங்கும் படத்தை விநியோகிக்கும் வர்த்தகப் பணியில் மும்முரமாக உள்ளது சன் பிக்சர்ஸ். வரவிருக்கும் நாட்களில் படத்தின் வர்த்தகம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பிரதானமாக நிற்கக் கூடும்.

No comments:

Post a Comment