எந்திரன் சவுண்ட் எடிட்டர் ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டி Times of India நாளிதழுக்கு இன்று அளித்துள்ள பேட்டியின் தமிழாக்கம் இதோ உங்கள் பார்வைக்கு..."ஒரு கட்டிடத்தில் இருந்து வேகமாக கொத்தாக வெளியேறும் மக்களின் அலறலை தனது அசிஸ்ட்டெண்ட்டுகளுடன் சவுண்ட் கேப்ட்சர் செய்கிறார். ரிசல்ட் அவருக்கு திருப்தியாக இல்லை. “உங்கள் அலறல் இன்னும் தத்ரூபமாக இருக்க வேண்டும், ஒன்றிணைந்து இருக்கவேண்டும்” என்று அவர்களை கேட்டுக்கொள்கிறார். திரும்பவும் Sound Capturing நடக்கிறது. இம்முறை அவருக்கு திருப்தி.
‘எந்திரன்’ படத்தில் இது ஒரு முக்கியமான காட்சி. நேற்றைக்கு நெருப்பில் சண்டையிடும் காட்சி ஒன்றை ஷூட் செய்து capture செய்தோம்.
ஆஸ்கார் விருதை வென்ற பின்பு அநேகமாக ரசூல் பணிபுரியும் படம் இதுவாகத் தான் இருக்கும். “கதை எதிர்காலத்தில் நடப்பது போல இருந்தாலும், யதார்த்தமாகவும் நம்பும்படியாகவும் இருக்கும். சென்னை புறநகரில் துவங்கும் எந்திரன் கதை படம் பிறகு கற்பனைக்கு எட்டாத இடத்திற்கு பயணிக்கும். லாஜிக் குறைப்பாடுகள் படத்தில் அறவே இல்லை எனலாம். சவுண்ட் எஃபக்ட்டுகளை பொறுத்தவரை EXPLORE செய்ய வேண்டியது இன்னும் நிறைய உள்ளது.
இசைப்புயல் ரஹ்மான் இதையெல்லாம் தான் இசையில் எப்படி கொண்டுவருகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.
எந்திரனைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகப் பெரிய படங்களுள் ஒன்று என்று கூறலாம். எந்திரனின் கதையும் களமும் தான் புதிதே தவிர, படம் அக்மார்க் தமிழ் படம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரஜினி சும்மா பிய்த்து உதறியிருக்கிறார். பேட்மேன் படத்தில், ‘ஜோக்கர்’ என்னும் குரூர வில்லன் பாத்திரத்தில் ஜாக் நிக்கல்சனை பார்ப்பது போல இருக்கும் எந்திரனில் ரஜினியை பார்ப்பது."
இவ்வாறு அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்...
No comments:
Post a Comment