ராவணன் என்று பேரை சொன்ன உடனே தெரியும் இது வழக்கமான காப்பி அடித்த மணிரத்னம் படம் தான் என்று ...
இருந்தாலும் அவருடைய பாணியில் கதை சொல்லும் விதத்திற்காக சென்ற ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்... கதை என்னவென்று சொல்ல அவசியமே இல்லை ...அதே ராவணன் சீதையை கடத்திய கதை தான் இதேதான் மணிரத்னமும் நினைத்தார் போல ...படத்தில் எங்கும் கதை சொல்லும் ஆர்வமே தெரியவில்லை.
இதில் ராவணனாக விக்ரம் (வீரா),சீதையாக ஐஸ்வர்யா ராய் பச்சன் (ராகினி) ,ராமராக ப்ரித்வி ராஜ் (தேவ் ),கும்பகர்ணன்னாக பிரபு , ஆஞ்சநேயராக கார்த்திக் மற்றும் சூர்பனகையாக ப்ரியாமணியும் நடித்துள்ளனர் .
என்னதான் ராமாயணக் கதையை எடுத்தாலும் திரைக்கதையில் புதுமை இருந்திருக்கலாம் அதே அனுமார் சீதையிடம் கணையாழி கொடுக்க வருவது முதல் ராமர் சீதையை சந்தேகிப்பது வரை அட்டு காப்பி . மேலும் இருக்கும்
திரைக்கதையிலும் பல இடங்களில் தொய்வு .யார் கதாபாத்திரங்களையும் சரியாக விவரிக்கவில்லை ... ப்ரித்வி கதாபாத்திரத்தை பார்க்கும் போதெல்லாம் நாயகன் வசனம்தான் நினைவிற்கு வருகிறது "நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா"என்று அதற்கு அவரும் படம் முழுவதும் கமல் போலவே "தெரியலியேப்பா" என்றுதான் சொல்லி இருக்கிறார் .
மேலும் விக்ரம் இன்னும் கந்தசாமியை விட்டு வெளிவர இல்லை போலும் அதே போல் சேவல் மாதிரி பல இடங்களில் கூவிக்கொண்டே இருக்கிறார் .பல இடங்களில் வாங்கிய சம்பளத்திற்கு மேலேயே நடித்தாலும் சில இடங்களில் தான் ஒரு தேசிய விருது வாங்கியவர் என்று காட்டிவிடுகிறார். ஐஸ்வர்யா பல இடங்களில் முதிர்ச்சியான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்,ஆங்காங்கே நடிப்பையும் காட்டியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் . பிரபு ,கார்த்திக் இருவரும் உற்சாகமாக நடித்துள்ளனர்,ப்ரியாமணி கொஞ்ச நேரம் வந்தாலும் நன்றாக நடித்துள்ளார் (இன்னும் எத்தன படைத்துள்ளதான் அந்த பொண்ண கற்பழிக்குற மாதிரி காட்ட போறீங்க ... பாவம்யா) .
படத்தில் உள்ள மிகப்பெரிய நிறை என்றால் அது சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டனின் ஒளிப்பதிவும் . கண்ணிற்கு குளிர்ச்சியான லோகேஷன்னும் தான் . ஆனால் வசனங்களில் மக்களுக்கு புரியுதோ புரியவில்லையோ என்று கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருக்கும் தமிழ்,லோகேஷங்களில் ஏனோ தென்படவேயில்லை .
ஆஸ்கார் விருது வாங்கிய ஏ .ஆர்.ரகுமான் இசை அமைத்து பட்டி தொட்டியெல்லாம் இசைத்த "உசுரே போகுதே ' படத்தில் வீனாக்கப்படிருப்பதை பார்த்தல் உசுரே போகுதே! பின்னணி இசையும் படத்திற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மணிரத்னத்திடம் ஒன்று சொல்ல வேண்டுமென்றால் "நீங்கள் புத்திசாலி என்பது ஏற்கனவே இந்தியாவே ஒப்புக்கொண்டு விட்டது பிறகும் அதையே நிரூபிக்க நினைக்க வேண்டாமே please!!!"
ஒரு வரி :ஒரு முறை திரையரங்கில் ஒளிப்பதிவிற்காக ...
இப்படிக்கு,
கெளதம்.
ya ya.. true da.....
ReplyDeletei saw a review by pvt channel, 1 guy said f**k off, and a girl said very bad movie of her life time. u 2 commented like the same, i was once among the mindless fans of mani rathnam until i saw godfather, read the life history f ambani, and so and so... a director cant entertain the crowd only by his way of screen making... those who have no brain to think a story, i have two words for them, "just quit"...
ReplyDeleteramayanam = mayanam
ReplyDeleteenna usure poguthula
by
goyee.blogspot.com